அவுஸ்திரேலியா வாழ் அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

0

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர்.

குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த புதிய அறிவிப்பை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிடவுள்ளார்.

ஜூலை 19, 2013 முன்னதாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும்.

முந்தைய அமைச்சரின் உத்தரவில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

படகு வழியாக வந்து அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவர்களுக்கும்,

தற்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாக்களில் உள்ளவர்களுக்கும்,

இந்த கொள்கை மாற்றம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஜூலை 19,2013 பின்பு படகில் வந்த அகதிகள் தொடர்பில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.

இதனால் இந்த அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையிலேயே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here