அவுஸ்திரேலியாவை புரட்டி போடும் புயல்… வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

0

அவுஸ்திரேலியாவில் திடீரென புயல் தாக்கியுள்ளது.

பாரிய வெள்ளமானது முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதால், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியாவின் அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

திடிரென உருவான இந்த புயலானது, குயின்ஸ்லாந்து முதல் நியூ சவுத் வேல்ஸ் வரையிலான கிழக்கு கடற்கரையில் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களில், கரைகள் உடைந்து நியூ சவுத் வேல்ஸ் நகரத்தின் பெரும்பகுதிகள் நீரில் காணப்படுகின்றன.

இதனால் சுமார் 2,00,000 மக்களை அவர்களது வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் மேலும் 3,00,000 மக்களை வெளியேற தயாராக இருக்குமாறும் அவுஸ்திரேலியாவின் அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயலானது, அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் அனைவருக்கும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நியூ சவுத் வேல்ஸ் வானிலை ஆய்வாளர் டீன் நரமோர் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்த புயல் காரணமாக 50 முதல் 150 மிமீ வரை மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைப்பெய்யும் பகுதிகளில் இந்த மழையின் அளவானது மாறுபடும் எனவும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here