அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுப்பட்ட இலங்கையர்…

0

இலங்கையை சேர்ந்த 44 வயதுடைய சமரநாயக்க என்பவர் அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுப்பட்டதால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான தகாத நடத்தை உட்பட 18 பாலியல் குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தனது வாகனத்தில் பயணித்த பெண்களின் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்று பல பெண்களினால் குற்றஞ்சாட்டு முன்வைத்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக்கூறப்படும் இந்தச்சம்பவங்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக பிரிஸ்பன் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் குறிப்பிட்ட நபரை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ள ஜூரிகள் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் 2010 ஆம் ஆண்டு ஏற்கனவே, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக தகாத வகையில் தன்னை வெளிப்படுத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு மூன்றுவருட சிறைத்தண்டனையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here