எதிர்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித இறுதி தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.
இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் அவநம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.