அத்தியாவசி உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நேற்றிரவு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார்.
உணவுவிநியோகம் தொடர்பான அவசரகால ஒழுங்குமுறைகள் நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நெல் அரிசி சீனி உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்கிவைப்பதையும் இவற்றின் விலைகளை அதிகரிப்பதையும் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நிவ்வுன்ஹெல நியமிக்கப்பட்டுள்ளார்.