அழிந்துப்போன விலங்கினத்தை மீண்டும் கொண்டுவரும் விஞ்ஞானிகள்

0

உலகில் 1930 கள் வரை ‘டாஸ்மேனியன் புலி’ இனம் வாழ்ந்துள்ளது.

அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன.

இந்த புலி இனத்தை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது.

இந்நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இவ்வாறு முயற்சிக்கின்றனர்.

டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது.

பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here