அழகிய 8 பெண்களை தொடர்ச்சியாக திருமணம் செய்த இளைஞர்..!

0

தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இதில் என்ன அதிசியம் என்றால் 8 பெண்களுக்கு இடையில் எந்தவித சண்டை, பொறாமை எதுவும் இல்லை.

Sorot 8 பெண்களை திருமணம் செய்த காதல் கதையை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதாவது Sorot, தனது அனைத்து மனைவிகள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளாராம்.

8 மனைவிகளை பார்த்த இடத்திலேயே அவரது மனதை பறிகொடுத்துள்ளார்.

அந்த வகையில் முதல் மனைவியை ஒரு நண்பரின் திருமணத்தில், இரண்டாவது மனைவியை மார்க்கெட்டில், மூன்றாவது மனைவியை மருத்துவமனையில் வைத்து சந்தித்துள்ளார்.

அதுபோல நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

7 வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போதும், எட்டாவது மனைவியை சுற்றுலா சென்ற இடத்தில் பார்த்துள்ளார்.

Sorot தனது அழகான 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரராகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here