அலட்சியமாக செயற்படும் தடுப்பூசி மையங்கள்…! பாதிக்கப்படும் மக்கள்!

0

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், விதிஷாவில் கஞ்ச் பசோதா பகுதியில் பெண் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 2 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 33 வயது பெண் அர்ச்சனா அஹிர்வார், தடுப்பூசி மையத்தில் வேறொருவருடன் பேசியபடி முதல் டோஸை பெற்றுள்ளார்.

அவர் தனது இருக்கையிலிருந்து எழுவதற்குள், அதே செவிலியர் அப்பெண்ணுக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

முதல் ஊசி செலுத்தப்பட்ட இடத்திலேயே மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது.

அர்ச்சனா திரும்பி பார்க்கும் நேரத்தில் இரண்டாவது ஊசியும் முழுமையாக போடப்பட்டுவிட்டது.

ஒரு நிமிட இடைவெளிக்குள் இது நடந்து முடிந்துவிட்டது.

பயத்தில் அர்ச்சனா கத்த ஆரம்பித்துள்ளார்.

அவரிடம் விவரத்தைக் கேட்டு அறிந்த கும்பத்தினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டு, தடுப்பூசி மையத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

பிறகு அர்ச்சனாவின் குடும்பத்தினர், மருத்துவமனை பொறுப்பாளர்களிடமும், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேத்திடமும் எழுத்துப் பூர்வாமாக புகார் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தீவிரத்தன்மையைக் கண்ட மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி, சம்பவம் நடத்த தடுப்பூசி மையத்துக்கு சென்றார்.

பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை தொடர்பிலும் ஆராய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here