அற்புத பலன்தரும் திரிபலா பொடி !!

0

திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப்பொருள். கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது.

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். திரிபலா பொடி நுரையீரல் பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தும். சைனஸ் பிரச்சினையையும் போக்கும்.

திரிபலா இதய நோய் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திரிபலாவில் உள்ள கசப்பு சுவை உதவி செய்கிறது.

குறிப்பாக திரிபலா வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். மட்டுமல்லாது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். அதோடு வயிற்றுப்புண்களை ஆற்றும்.

இந்த சூரணம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும். ரத்தசோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வந்தால் போதும். திரிபலாவிற்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் தன்மை இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here