அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பிரித்தானிய பிரதமர்

0

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson) சைனஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது தனது இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகின்றார்.

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

20 ஆம் திகதி லண்டனில் உள்ள அரசு நிதி அளிக்கும் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் பிரதமர் பொறுப்பை துணை பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப் கவனித்துக்கொண்டார்.

நடைபெற்ற அறுவை சிகிச்சை கொரோனாவுடன் தொடர்பு உடையது இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு வார இறுதியில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார்.

இந்த மாத இறுதியில் ஜி 7 நாடுகள் கூட்டத்திலும் நேட்டோ உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here