அர்ஜென்டினாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு! பலர் பலி

0

அர்ஜென்டினாவில் கலப்படம் செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்திய 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 56க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஹர்லிங்காம், சென் மார்ட்டின் மற்றும் டிரெஸ் டி பெப்ரரோ நகரங்களில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் உயிரிழந்தார்.

அதன் பின்னர், குறித்த போதைப்பொருளை விற்பனை செய்ததாக கருதப்படும் குழுவொன்றை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பிற போதைப்பொருள் விற்பனை செய்யும் குழுக்களுடனான போட்டித் தன்மை காரணமாக, கொக்கேனில் சில பொருட்கள் கலந்திருக்கப்பட்டதால், அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஆய்வக முடிவுகளின் பின்னர் கொக்கேனில் கலக்கப்பட்ட பொருள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின.றது.

சமீபத்தில் கொள்வனவு செய்த எந்தவொரு போதைப்பொருளையும் பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here