அரபிக்கடலை தாக்கவுள்ள புதிய புயல்! வானிலை ஆய்வு மையம்

0

கிழக்கு-மத்திய அரேபியக்கடலில் அடுத்த சில நாட்களில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அது புயலாக உருவானால், அது தான் 2021 ஆம் ஆண்டின் முதல் புயலாக காணப்படும்.

மியான்மரால் வழங்கப்பட்ட ‘Tauktae’ என்று பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 14 ஆம் திகதி தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

இது மே 15 க்குள் லட்சத்தீவு பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரேபிய கடல் வழியாக வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

மே 16 ஆம் திகதிக்குள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள மாநிலங்கள் புயலின் தாக்கத்தை காணக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tauktae புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here