அரச சேவையில் உள்ள பயிலுநர் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

0

இலங்கையில் கடந்த 3 ஆம் திகதி முதல் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 50,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது வேதனம் 31,490 ஆக உயர்த்தப்படுவதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் அவர்களுக்கு மாதாந்தம் 41,490 ரூபா வழங்கப்படும்.

இந்த பட்டதாரி பயிலுனர்கள் இதுவரை மாகாண சபைகள், மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரியாக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here