அரசுடன் பேசத் தயாராகும் கூட்டமைப்பு

0

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்க்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமையாது என்றும் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு விரும்பினால் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஆயுத பலம் இல்லை. ஆகவே பேச்சுவார்த்தைகள் ஊடாகவே அனைத்து விடயங்களையும் கையாள வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இனப்பிரச்சினை தொடர்பாக நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாரகவே உள்ளோம். பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்யமுடியும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜெனிவா தீர்மானம் ஒரு தடையாக அமையாது. தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். அதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடத்தில் நாம் எமது முன்மொழிவுகளைச் செய்துள்ளோம்.

மேலதிக விடயங்கள் தேவைப்பட்டால் அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். ஆகவே அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை தவிர்ந்து செல்ல முடியாது.

மேலும் அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தைகளைச் செய்வதற்காக இறங்கி வருகின்றது என்றெல்லாம் கருத வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here