முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தாஹம் சிறிசேன அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் அந்தப் பதவியை ஏற்றப்பின்னர் அங்கு பிரதேசத்தில் இளைஞர் அணிக் கூட்டமொன்றையும் நடத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தேர்தல்களில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.