அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை த்ரிஷா? 

0

நடிகை த்ரிஷா அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா நடித்த ’பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்ற படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் திடீரென அரசியல் த்ரிஷா அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் நடிகைகள் குஷ்பு, நக்மா, திவ்யா ஸ்பாந்தனா உள்பட பலர் இணைந்தனர் என்பதும் குஷ்பு மட்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் தமிழக அரசியலில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதே த்ரிஷாவின் விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக மக்கள் த்ரிஷாவை ஒரு நல்ல நடிகையாக ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை அரசியல்வாதியாகவும் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here