அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு! யாழ் மக்களுக்கு வெளியாகிய அறிவிப்பு

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

5,000 புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன.

அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here