அயல் வீட்டு தகராறு! விரலை கடித்து துண்டாக்கிய நபர்….

0

இலங்கையில் தனிப்பட்ட தகராறு காரணமாக அயல் வீட்டை சேர்ந்த நபரின் கைவிரல் துண்டாகும் வரை ஒருவர் கடித்துள்ளார்.

குறித்த நபரை நேற்று கைது செய்துள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர், காயமடைந்த நபரின் கட்டை விரலை கடித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் விரலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் தனது வீட்டில் வாகன திருத்தகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அங்கு ஏற்படும் சத்தம் காரணமாக சந்தேக நபர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here