அம்பாந்தோட்டையில் பதற்ற நிலை: மஹிந்தவின் வீடு முற்றுகை?

0

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஜீனரத்ன தேரர் ஆகியோரைப் பார்வையிட பெரும் தொகை மக்கள் ஹம்பாந்தோட்டை சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை, கார்ல்டன் மாளிகை முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்ற பயத்தில், கார்ல்டன் மாளிகையின் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்காலை பஸ்தரிப்பு நிலையம் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள் மற்றும் சமயத் தலைவர்கள் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை சற்றுமுன் நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here