அம்பயரின் தவறான முடிவு – கடுப்பில் மட்டையை ஓங்கி அடித்த விராட் கோலி

0

ஓய்வுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அய்ஜாஸ் பட்டேலின் பந்தில் எல்பிடபிள்யூ அவுட் ஆன விராட் கோஹ்லி நான்கு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு பெவிலியன் திரும்பினார். இருப்பினும், கோஹ்லியை துரதிர்ஷ்டசாலி என்று அழைப்பதில் தவறில்லை, ஏனெனில் அவரது மட்டையின் உள் விளிம்பில் பந்து பட்டப்பிறகு தான் அவரின் காலில் உள்ள பேட்டில் பந்து தாக்கியது என்பதை மறுபரிசீலனை காட்சியில் தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் ஆன்-பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரி அவுட் என கை தூக்கியது மற்றும் மூன்றாவது நடுவரின் முடிவால் கோஹ்லியும் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் (Rahul Dravid) திகைத்துப் போனார்கள்.

இன்னிங்ஸின் 30வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் அய்ஜாஸ் படேல் ஓவரின் நான்காவது பந்தில் கோஹ்லிக்கு எதிராக எல்பிடபிள்யூ மேல்முறையீடு செய்தார். ஆன்-பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரி தாமதமின்றி விரலை உயர்த்தினார். கோஹ்லி உடனடியாக டிஆர்எஸ் (Umpire Decision Review) முறையை நாடினார். கோஹ்லி மட்டையின் உள்பகுதியைத் தாக்கியதாக மறுபதிவுகள் காட்டுகின்றன. ஆனால் பந்து முதலில் பேடில் பட்டதா அல்லது மட்டையைத் தாக்கியதா என்பதை மூன்றாம் நடுவருக்குத் தீர்மானிப்பது கடினமாகிவிட்டது. நடுவர் வீரேந்தர் சர்மா பலமுறை ரீப்ளே பார்த்துவிட்டு அவுட் என்று அறிவித்தார்.

பெரிய திரையில் சிவப்பு விளக்கை பார்த்த கோஹ்லி கோபத்துடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினார். கோஹ்லி திரும்புவதற்கு முன் கள நடுவர்களுடன் சில உரையாடல்களை நடத்தினார். ஆனால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். கோஹ்லி கோபமாக மட்டையை பவுண்டரி லைனில் அடித்தார். கோஹ்லியுடன், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தார். டிரஸ்ஸிங் ரூமில் டிராவிட்டுடன் கோஹ்லி இதுக்குறித்து பேசிக் கொண்டிப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

நியூசிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அய்ஜாஸ் படேல் இன்றைய இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தினார். இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை, அதற்குள் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். படேல் முதலில் ஷுப்மான் கில் (44) ஸ்லிப்பில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு ஒரே ஓவரில் புஜாராவையும், கோஹ்லியையும் பலியாக்கினார். புஜாரா, கோஹ்லி இருவராலும் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. 80 ரன்களுக்கு இந்தியாவின் 3 விக்கெட்டுகளை இழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here