அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்….!

0

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அதில் 2 பேர் உயிரிழந்தனர்.

வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நேற்றிரவு உணவு விருந்து நடைபெற்ற போது, உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்ததாகவும் மற்றொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here