அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பிரித்தானிய இளவரசரின் மனைவி

0

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனவைி மேகன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் அலுவகத்தில் பணியாற்றிவரும், தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

ஓப்ராவுடனான நேர்காணலில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, பிரித்தானியா அரச குடும்பம் மீது குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஓப்ரா நேர்காணலை தொடர்ந்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க மேகன் மெர்க்கல் திட்டமிட்டு வருவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தைத் தொடங்கவும், அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடுவது குறித்தும் பைடனின் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் மெர்க்கல் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைபன் வயது காரணமாக இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்,

எனவே மெர்க்கல் போட்டியிட விரும்புவதாக ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளாக தகவல்கள் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here