அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடன் இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜோ பைடன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இன்று முதல் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர்.

தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது.

பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்க்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.

16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here