அமெரிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் முதல் தடவையாக தமிழர் வசமானது

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடர், தனது அதிகாரங்களை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா ஹரிஷிடம் கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகயீனம் காரணமாக ஜோ பைடன், சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதியிடம் (19) முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முதலாவது பெண் தலைமைத்துவம் இவர் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க இராணுவம் மற்றும் அணுஆயுத அதிகாரங்கள் தற்காலிகமாக கமலா ஹரிஷ் வசமாகியுள்ளது.

இதன்படி, தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here