அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல முயன்ற நபர்… கூறிய காரணம்…!

0

அமெரிக்காவில் கடவுள் அனுப்பியதாக கூறி, ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல புறப்பட்டு சென்ற நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல தலைநகருக்கு சென்றுள்ளார்.

கட்டுமான ஒப்பந்ததாரரன Scott Merryman கடவுள் தம்மை அனுப்பியதாக விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

சர்ப்பத்தின் தலையை வெட்டினால் நாடு காப்பாற்றப்படும் என்று அவர் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி பைடனின் பிளவுப் படுத்தும் கொள்கையினால் அமெரிக்க மக்கள் மிகவும் வெறுத்துப்போயுள்ளனர்.

இதன் காரணமாக அவர் நரகத்திற்கு தான் செல்வார் என்றும் அதிகாரிகளிடம் Scott Merryman கூறியுள்ளார்.

மட்டுமின்றி தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள அவர் தனது சமூக ஊடக பக்கங்களிலும் அச்சுறுத்தும் விதமாக செய்திகளை பதிவிட்டு வந்துள்ளதுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here