அமெரிக்க காங்கிரஸ் சபையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளதாக இலங்கை குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் கடந்த 18ஆம் திகதி இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த அமைச்சு, குறித்த யோசனையில் உறுதிப்படுத்தப்படாத உண்மைக்கு புறம்பான விடயங்கள் அடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த யோசனையின் ஒருதலைபட்ச தன்மையை ஆராயும் போது, அது மனித உரிமைகள் யோசனை இல்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தமது எதிர்ப்பை எதிர்வரும் நாட்களில் காங்கிரஸ் சபையிலும் ஆசியா தொடர்பான உப குழுவின் பிரதிநிதிகளிடத்திலும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்திலும் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here