அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸிற்கு கொலை மிரட்டல்! பெண் ஒருவர் கைது

0

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸை கொலை செய்ய போவதாக பெண் ஒருவர் மிரட்டியுள்ளார்.

இவ்வாறு கொலை செய்ய போவதாக அச்சுறுத்திய 39 வயதான தாதியை புளோரிடா மாநில பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

புளோரிடாவை சேர்ந்த செவிலியர் Niviane Petit Phelps (39). இவர் 2001-ஆம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்ள்ளார்.

இவர் சிறையில் உள்ள தனது கணவருக்கு JPay மூலம் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

சிறையில் உள்ள கைதிகளை அவரது குடும்பத்தினருடன் இணைத்து JPay என்ற கணினி பயன்பாடு மூலம் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.

Niviane Petit Phelps தனது கணவருக்கு அனுப்பிய வீடியோவில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் Niviane Phelps மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ரகசிய சேனல் விசாரணை நடத்தி வந்தது.

செவிலியர் Niviane Petit Phelps-ன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here