அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் இருந்து மீட்க்கப்பட்ட 4,000 பீகிள் நாய்கள்

0

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் மருந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்களுக்கு விற்கப்பட இருந்த 4,000 பீகிள் நாய்கள் மீட்கப்பட்டுள்ளது.

அந்த பீகிள் நாய்கள் Envigo என்ற அந்த நிறுவனத்தில் போதிய இடவசதியின்றி வளர்க்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கெட்டுப்போய் புழு வைத்த உணவு பரிமாறப்பட்ட நிலையில் நோய்வாய்ப்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்காமல் உடனடியாக கொல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பிராணிகள் நல ஆர்வலர்களின் தொடர் போராட்டங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உடனடியாக அந்த நிறுவனத்தை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கு வளர்க்கப்பட்ட 4,000 பீகிள் நாய்கள் பிற மாநிலங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here