அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கோர விபத்து….! 15 பேர் பலி….!

0

அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – மெக்சிகோ நாடுகளின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ எல்லையில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டிய பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 6.16 மணியளவில் விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 பேருடன் சென்ற எஸ்.யூவி ரக வாகனம் டிரக் சென்று கொண்டிருந்த பாதையில் புகுந்ததாகவும் இதனால் விபத்து நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மேலும், தீவிர காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here