அமெரிக்காவை புரட்டிபோட்டுள்ள மணல் புயல்! 7 பேர் பலி

0

அமெரிக்காவில் உள்ள யூட்டா (Utah) மாகாணத்தில் மணல் புயல் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமக இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்து மருத்துவமணியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

யூட்டா மாநிலத்தில் உள்ள கனோஷ் (Kanosh) டவுன் பகுதியில் 4.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இந்த மாநிலம் முழுவதும் பாலைவனங்கள் பரவலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள படங்களில் விபத்தில் அடிபட்டுள்ள வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கிறது.

அந்த வாகனங்களை மீட்க வந்துள்ள மீட்பு வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here