அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கும் வடகொரியா….

0

அமெரிக்காவிடம் அடிபணியவோ ஒத்துழைக்கவோ முடியாது என வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணையை ஏவி உலக நாடுகளை உலுக்க எங்களால் முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

தங்களிடம் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சமகாலத்தில் பல நாடுகள் அமெரிக்காவுடன் பணிந்து செல்வதுடன், கண்மூடித்தனமான ஒப்பந்தங்களையும் முன்னெடுத்து வருகிறது.

வடகொரியா, இந்த பூமியிலேயே அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கும் வகையிலான ஏவுகணைகள் தங்களிடம் மட்டுமே உள்ளதாகவும் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளிடம் மட்டுமே ஹைட்ரஜன் வெடிகுண்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகொரியா எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ளார்.

அவர், சமீபத்தில் சோதனை மேற்கொண்ட ஏவுகணைகள் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சாதனை என அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here