அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் வசித்து வரும் Melissa என்கின்ற சிறுமி, கடந்த 22 ஆம் திகதி அன்று தனது தாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கடையில் இருந்து வெளியே வந்த இளைஞரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்கினர்.
ஆனால் குறி தவறி அந்த குண்டு அந்த வழியாக நடந்து சென்ற Melissa-வின் தலையில் பாய்ந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு சிறுமி மீட்பட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அந்த இளைஞரின் முதுகில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.