அமெரிக்காவில் 7 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்

0

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீபன் பவுஸ்ட், தனது 7 வயது மகன் சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன் அங்குள்ள நதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

திடீரென நதியின் வேகம் அதிகரித்தது.

அதில், படகு கவிழ்ந்து மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

சிறுமி மட்டும் பாதுகாப்பு ஜெக்கெட் அணிந்திருந்தார்.

தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில் கரையை நோக்கி சேஸ் நீச்சலடிக்க ஆரம்பித்துள்ளார்.

நதியின் அலையின் வேகத்துக்கு எதிராக செல்ல வேண்டியதால் கடுமையாக போராடினார்.

ஒரு மணி நேரம் போராடி கரையை அடைந்து, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளான்.

அங்கிருந்தவர்கள் தந்தையையும் மகளையும் மீட்டுள்ளனர்.

தீரத்துடன் செயல்பட்டு தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற முயற்சி எடுத்த சிறுவன் சேஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here