அமெரிக்காவில் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..!

0

அமெரிக்காவின் மியாமி நகரின் Brownsville பகுதியில், கடந்த சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் கருப்பு நிற கார் ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் தள்ளிவிடப்பட்டுள்ளான்.

அதன் பின் அந்த சிறுவன் இரத்தக் காயங்களுடன் வருவதைக் கண்ட நபர் ஒருவர் சிறுவனுக்கு உதவ முன் வந்துள்ளார்.

அதன் படி அவர் உடனடியாக அவசர சிகிச்சை எண்ணை தொடர்பு கொண்டார்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பான சிசிசிடிவி காட்சிகள் அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியிருந்தது.

அதில் இரத்தக் காயங்களுடன் வரும் சிறுவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கீழே சுருண்டு விழுகிறார்.

அப்போது அவர் உடல் முழுவதும் இரத்த காயங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

அங்கிருந்த நபர் ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவ முயற்சிக்கிறார்.

ஆனால், இதற்கு காரணமான நபரை தேடி வருவதாகவும், அவனைப் பற்றி ஏதேனும் தகவல் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன் பின் அவன் தாக்கப்பட்டோ அல்லது சுடப்பட்டோ காரில் இருந்து வீசி எறியப்பட்டுள்ளான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here