அமெரிக்காவில் ஷெட்டில் பெண் சடலம்..! இளைஞர் கைது.

0

அமெரிக்காவில் பிட்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு தனிமையான இடத்தில் ஷெட் ஒன்று உள்ளது.

இதன் உள்ளிருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் கிறிஸ்டல் லெஷ்னர் (38) என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மோண்டல் ரீட் என்ற 26 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை, சடலத்தை மறைத்து வைப்பது போன்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here