அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே பரபரப்பு சம்பவம்….!

0

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் முக்கியமான 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட தீயணைப்பு மற்றும் EMS துறையின் அறிக்கையின்படி,

வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள லாஃபாயெட் பூங்காவில் காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் நால்வரும் தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here