அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை செய்துகொள்வார் என்றும் அதன்பின் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக் என்ற மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் காட்சியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றவுடன் இணையதளங்களில் வெளியாகும் முதல் புகைப்படம் என்பதால் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வேற லெவல் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here