கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முககைவசங்களை எரிக்க அமெரிக்காவின் Idaho கேபிடலின் முன்புறத்தில் குறைந்தது 200 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
முகக்கவச ஆணைகள் தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு என்றும் ஒடுக்குமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாகாணத்தின் தலைமைச் செயலக வளாகத்தின் முன்னிருக்கும் படிக்கட்டுகளில் நெருப்பை மூட்டிய அந்த குழு அவர்கள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான முகக்கவசங்களை ஒவ்வொன்றாக தீயிலிட்டு எரித்தனர்.
இந்த எதிர்ப்புகளின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் உள்ள சில மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தங்கள் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என எதிர்ப்பு தெரிவிக்கித்துவருகினறனர்.
மேலும், அவர்கள் பொது மக்கள் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்