அமெரிக்காவில் மீண்டும் கட்டாயமாக்கப்படும் மாஸ்க்….

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அதனையடுத்து, மாஸ்க் கட்டாயம் என்பதனை அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரு மாதத்திற்கு முன்பு நீக்கியது

இந்நிலையில் முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மாஸ்க் கட்டாயம் என மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சனிக்கிழமை முதல் மாஸ்க் கட்டாயம் என்ற விதி அமுலுக்கு வருகிறது.

நோய்த்தொற்று விகிதங்கள் மீண்டும் குறையும் வரையில் புதிய மாஸ்க் கட்டாயம் என்ற விதிமுறை நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 51% மக்கள் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 52% மக்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here