அமெரிக்காவில் மர்ம நபர் தாக்குதல்…. சாலையில் நடந்த கொடூர சம்பவம்

0

அமெரிக்காவின் நியூயார்க்கின் வாட்டர்டவுன் பகுதியில் படப்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு பொலிசார் விரைந்து வந்த நிலையில், வாகனம் ஒன்றில் அந்த ஆயுததாரி தப்பியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் பலர் காயம் பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எத்தனை பேர், அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

உள்ளூர் நேரப்படி பகல் 2 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, சம்பவம் நடந்த பகுதி குடியிருப்பாளர்களுக்கு, பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும் கேண்டுக்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாயமான ஆயுததாரி தொடர்பில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here