அமெரிக்காவில் மரத்தில் மோதி கார் விபத்து! தீயில் கருகி இருவர் பலி

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சனிக்கிழமையன்று டெஸ்லாவின் 2019 Model S காரில் 2 பேர் பயணித்துள்ளார்.

ஒருவர் முன் பக்க பயணிகள் இருக்கையிலும், மற்றோருவர் பின்னால் உள்ள பயணிகள் இருக்கையிலும் அமர்ந்து சென்றுள்ளனர்.

ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய அந்த காரில் ஓட்டுனரின் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Houston-க்கு வடக்கே அதிவேகமாக சென்ற அந்த கார் நேவிகேஷனில் கோளாறு ஏற்பட்டு ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்துள்ளது.

காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர் விபத்து நடந்த நேரத்தில் டிரைவர் பக்க ஏர்பேக் பயன்படுத்தப்பட்டதா, காரின் டிரைவர் உதவி அமைப்பு ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here