அமெரிக்காவில் பாரிய காட்டுத் தீ…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருகின்றது.

காட்டுத் தீ கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவி மரங்கள் தீப்பற்றி எரிகின்றது.

இந்நிலையில், வானுயர புகை எழுவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

ஆடம்ஸ் கவுண்டியில் உள்ள லிண்ட் நகரத்திலும் காட்டுத் தீ பரவியுள்ளது.

லிண்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காட்டுத் தீயில் 6 வீடுகள், 8 கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here