அமெரிக்காவில் பலத்த புயல் காற்று… இருளில் மூழ்கிய நகரங்கள்….

0

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

இந்த புயல் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது.

இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

மின்கம்பங்கள் சரிந்தன, வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதுடன் புயலால் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயலில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

மேலும் இந்த அனர்த்தத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here