அமெரிக்காவில் பயங்கர சம்பவம்! 3 வயது கறுப்பின சிறுவன் சுட்டுக் கொலை!

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், மியாமி அவெனியூவில் உள்ள பகுதியில், கடந்த 24 ஆம் திகதி மாலை எலிஜா லாபிரான்ஸ் (Elijah LaFrance) எனும் கறுப்பின குழந்தை தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

கேக் வெட்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகு 8 மணியளவில், திடிரென பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் பிறந்தநாள் கொண்டாடிய வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் குழந்தை எலிஜா லாபிரான்ஸ் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் 21 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து Miami-Dade பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் யார் என்பது குறித்த தகவல் கிடைக்காத நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here