அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. இருவருக்கு நேர்ந்த கதி

0

அமெரிக்காவில் இரவு நேர விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

அதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அயோவா மாகாணத்தில் உள்ள இரவு நேர விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1:27 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பொலிஸார் மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here