அமெரிக்கா மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் லேண்டிங் கியர் பழுதாகிய நிலையில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியுள்ளது.
டொமினிக்கன் குடியரசு நாட்டு விமானத்தின் முன்பகுதி லேண்டியங் கியர் பழுதானதை அடுத்து அவசரமாக மியாமி விமானத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் தரையோடு உரசியதில் விமானத்தின் நடுபகுதியில் தீ பற்றியுள்ளது.
இதன்போது துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
4 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊழியர்கள் உள்பட 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.