அமெரிக்காவில் தஞ்சமடையும் உக்ரைன் மக்கள்

0

உக்ரைன் ரஷ்ய போர் தற்போது வரை தீவிரமடைந்துள்ளது.

அதனால் உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் வந்த ஏராளமான அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜுவானா நகரத்திற்கு குழந்தைகள் பெண்கள் உட்பட இதுவரை சுமார் ஆயிரத்து 700 உக்ரைனியர்கள் வந்துள்ளது.

அமெரிக்க குடியேற்று அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்ற மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here