அமெரிக்காவில் கோர விபத்து… குழந்தைகளுடன் 13 பேர் உடல் கருகி பலி

0

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிலடெல்பியா நகர 3 மாடி குடியிருப்பில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here