அமெரிக்காவில் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த கொடூர தாய்…!

0
Baby, Newborn, Hand, Pregnant, Sleeping

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள Louisville இளம் பெண் ஒருவர் தனது 10 வயது மகனை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை Louisville மெட்ரோ பொலிஸுக்கு Taylor-Berry பகுதியில் உள்ள Algonquin Parkway 1200-வைத்து பிளாக்கிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது .

அந்த அழைப்பில் பேசியவர்கள், தங்கள் பக்கத்து வீட்டு வாசற்படியில், கெய்ட்லின் ஹிக்கின்ஸ் Kaitlyn Higgins என்ற 28 வயது பெண் கையில் ஒரு துப்பாக்கியுடன் அச்சுறுத்தும் வகையில் உட்கார்ந்திருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

அங்கு வீட்டு வாசலிலிருந்து அங்கிருந்த கார் வரை இரத்தம் வடிந்திருப்பதைப் பார்த்த பொலிஸ், காரின் டிக்கியை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதில் அப்பெண்னின் 10 வயது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.

ஹிக்கின்ஸை விசாரித்தபோது, முதலில் அவர் தனது மகனின் நாக்கை அறுத்து எடுக்க முயற்சித்ததாகவும், பின்னர் அது முடியாமல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கின்ஸுக்கு 2 வயதில் மற்றோரு குழந்தை இருப்பதாகவும், அவர் அவரது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கின்ஸ் மீது கொலை, வீட்டு வன்முறை, உடலை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன

இந்நிலையில், மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here