அமெரிக்காவில் குரங்கம்மை பரவும் அபாயம்… ஜோ பைடன் எச்சரிக்கை

0

அமெரிக்காவில் குரங்கம்மை அதிகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

எனவே மக்கள் நோய்க்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே தோன்றும் நோய், இந்த மாதத் தொடக்கத்திலிருந்து வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது.

தென்கொரியா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவில் குரங்கம்மையின் பரவல் எந்த அளவு உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்களை இன்னமும் பெறவில்லை என்றார்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துவிடுவர், அதேசமயம் மிக அரிதாகவே மரணம் சம்பவிப்பதுண்டு.

அதேவேளை சனிக்கிழமை நிலவரப்படி உலகெங்கும் இதுவரை 92 குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here